விக்கிரவாண்டியில் 24,421 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.

7-வது சுற்றின் முடிவில் திமுக 44,780 வாக்குகளும், பாமக 17,359 வாக்குகளும், நாதக 3556 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 311 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 24,421 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் திமுக தொண்டர்கள் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles