விமரிசையாக நடைபெற்ற ஜேகேஆர் பொதுப்பணித்துறை இந்துக்களின் 61 ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சன உபயம்!

கோலாலம்பூர் ஜூலை 13-
நாட்டில் தாய்க்கோவிலாக விளங்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நேற்று ஜேகேஆர் பொதுப்பணித்துறை இந்துக்களின் 61 ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சன உபயம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஓவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை இந்துக்களின் சார்பில் ஆனித் திருமஞ்சன உபயம் உபயக்காரர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நேற்று 61 ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சன உபயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவருளைப் பெற்றனர்.

உபய நாட்டாமை ஆர். அன்பழகன், உபய பிரதிநிதிகள் கே. ரஜினிகாந்த், கே. சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உபயத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா, புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா அறங்காவலர்கள் ஆர். கதிரேசன், சந்திரசேகரன், நாராயணசாமி, டத்தோ சுரேஸ், டத்தோ கண்ணா சிவகுமார் செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ பி அழகன், உட்பட வாரிய உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு பூசைக்கு பின்னர் சாமி ஊர்வலமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உபயக்காரர்கள் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா தம்பதியருக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles