
ஷா ஆலம், ஜூலை 13 செலாட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதியைக் காலி செய்ய வேண்டியதில்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.
டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை பார்ட்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) கட்சி நீக்கியது, சிலாங்கூர் மாநில அரசியலமைப்பின் 65ஏ(2)(சி) பிரிவின் கீழ் திட்டமிடப்பட்ட நீக்கம் எனக் கண்டறியப் பட்டதாக லாவ் வேங் சான் கூறினார்.
உலு கிளாங் தொகுதி உறுப்பினர் சமர்பித்த அறிவிப்பு மற்றும் சான்றுகள் நிரூபணம் செய்வதற்கான பொறுப்பின் சுமையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்று அவர் சொன்னார்.

