ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் கல்வி மருத்துவ உதவிகளுக்கு 84,691 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தது!

கோலாலம்பூர் ஜூலை 13-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்கு பெரும் உதவிக்கரம் நீட்டி வருவதாக தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

இவ்வாண்டு
கல்வி, மருத்துவ உதவிக்காக 84,691 ரிங்கிட் நிதியுதவியை வழங்கி உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 1 லட்சம் வெள்ளி சமூக சேவைகளுக்காக பயன் படுத்துகிறோம்.

இவ்வாண்டு இதுவரை 84,691 ரிங்கிட்டை நிதியுதவியாக தேவஸ்தானம் வழங்கியுள்ளது.

உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறுநீரக சுத்திகரிப்பு உட்பட மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற உதவிகள் தொடரும் என்று இன்று பலருக்கு நிதியுதவி வழங்கியபோது அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles