
பத்து காஜா, ஜூலை 13-
பேராக் பத்து காஜாவை சேர்ந்த இளம் கராத்தே வீராங்கனை கலைவள்ளி மாரிமுத்து, சிறந்த மாணவி ஆவார்.
போலிடெக்னிக் அறக்கட்டளை திட்டத்தில் தனது படிப்பை வெற்றிகரமாக தொடர்ந்தது மட்டுமல்லாமல், இந்த திறமையான பெண் சரவாக் சுக்மா 2024 பேராக்கின் பெயரை பிரகாசிக்கச் செய்ய உறுதி பூண்டுள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்குவதோடு, கராத்தே தற்காப்புக் கலையிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.
இந்த ஆண்டு சரவாக்கில் நடைபெறவுள்ள சுக்மாவுக்குத் தயாராகும் வகையில் பத்து காஜா பெர்டானா வணிக மையத்தில் தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இவரினா ஆற்றலைப் பாராட்டி, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார், படிப்பதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க முன்வந்தார்.
அதாவது கலைவள்ளிக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டது.
இது அவரது கல்வித் திறனை மேம்படுத்த உதவும் ஒரு முனைப்பான நடவடிக்கையாகும் என்று சிவகுமார் தெரிவித்தார்.

