
கோலாலம்பூர் ஜூலை 20-
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகுமாறு மசீச எனப்படும் மலேசியச் சீனச் சங்கத்தின் (MCA) தலைமைத்துவத்திற்கு அதன் அடிமட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சோங் சின் வுன் வன்மையாக மறுத்துள்ளார்.
இதிலா உண்மை இல்லை. கட்சிக்குள் அதுபோன்ற விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை”
1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி கூட்டணியைப் பிளவுப் படுத்த இம்மாதிரியான நடவடிக்கைகளைச் சில தரப்பினர் முன்னெடுக்கப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மசீச தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் மசீசவின் நடவடிக்கைகளிலும் செயல் திறனிலும் ஏமாற்றத்தை சந்தித்தவர்கள், தேசிய முன்னணி கூட்டணியில் பிளவை உண்டாக்க துடிக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

