
பிறை ஜூலை 24-
பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதி சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஜூலை 28 ஆம் தேதி காலை 8.30 முதல் பிற்பகல் 2.00 மணிவரை பிறை உத்தாமாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கலில் மாபெரும் பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
முதல் பரிசு தொலைக்காட்சி பெட்டியாகும்.
இந்த நிகழ்வில் எங்களுடன் வந்து சேரும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

