
கோலாலம்பூர், ஜூலை 23 – முகநூலில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடும் போலி முதலீட்டுக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இம்மாதம் 15ஆம் தேதி கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா பகாங் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் மூலம் 31 முதல் 54 வயது வரையிலான மூன்று பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப் பட்டதாகப் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்
இந்த மோசடி நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் செயலாளர்களாக அந்த அறுவரும் செயல்பட்டு வந்ததாகக் கூறிய அவர், அக்கும்பலுக்குச் சொந்தமான மொத்தம் 474,395 வெள்ளியை உள்ளடக்கிய 15 வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கியுள்ளது என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

