
கோலாலம்பூர், ஜூன் 19-
தந்தை என்பவன் ஒரு குடும்பத்தின் முதுகெலும்பு. தன் குடும்பத்தின் நலனுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு, பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கப் போராடும் ஒவ்வொரு தந்தையும் ஒரு மாவீரன்.” என்று தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தந்தைக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அனைந்து தந்தையர்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின நல்வாழ்த்துகள். நானும் ஒரு தந்தைதான். பிள்ளைகளின் நலடுக்காகவே வாழ்பினோன். என்னைப் போலவே பல தந்தைகள் தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கின்றனர். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“இன்றைய காலகட்டத்தில், ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து, பணம் அல்ல; அவர்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், நேர்மை மற்றும் சமுதாயத்தின் மீதான அக்கறைதான். சவால்கள் நிறைந்த இந்த உலகில், பிள்ளைகளைத் தைரியத்துடன் வளர்த்து ஆளாக்கும் ஒவ்வொரு தந்தையையும் நான் இந்த நாளில் மனதாரப் பாராட்டுகிறேன்.
உங்களின் தியாகங்கள் என்றும் போற்றுதலுக்குரியவை.”
“குடும்பத்தை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தையும் செதுக்கும் சிற்பிகளாகத் தந்தையர்கள் திகழ வேண்டும். இந்தத் தந்தையர் தினத்தில், அனைத்துத் தந்தையர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் உங்கள் குடும்பத்தின் வெற்றிக்குத் தொடர்ந்து உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவதாக தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சொன்னார்.

