உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசில் கலக்கல் வெற்றி

வாஷிங்டன் ஜூன் 20-
பிலடெல்பியாவில் இன்று காலை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

தோல்வியை தழுவிய ஹைத்தி அணியினர், தொடரில் இருந்து வெளியேறினர்.

பிரேசில் அணி சார்பில் மேத்யூஸ் குன்ஹா இரண்டு கோல் அடித்து அணியினருக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இன்னொரு கோலை வினிஷியஸ் ஜூனியர் அடித்தார்.இதன் மூலம் போட்டித் தொடரின் முதல் வெற்றியை பிரேசில் ருசித்தது.

முந்தைய ஆட்டத்தில் மொராக்கா அணியுடன் டிரா செய்த பிரேசில் அணி, வெற்றிக்கான வேட்கையுடன் களம் இறங்கி, ஹைத்தியை துவம்சம் செய்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles