
வாஷிங்டன் ஜூன் 20-
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குருப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் சியாட்டிள் மைதானத்தில் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்திலேயே அமெரிக்க அணி ஒரு கோலுடன் கணக்கை தொடங்கியது.
தொடர்ந்து ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணி வீரர் அலெக்ஸ் ஃப்ரீமேன் கோலை அடிக்க அமெரிக்க அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியும் கோல் அடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும், கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் அமெரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

