இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

காசா, இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த 9 மாதங்களாக தொடரும் இந்த போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.

இந்தநிலையில், பாலஸ்தீனம் அருகே நூசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஈலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தைய வெளியே எடுத்தனர்.

குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததையடுத்து தற்போது நலமுடன் உள்ளது. நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles