இந்தியாவிடம் இருந்து புரட்சி வீரன் என்ற மாபெரும் கௌரவ விருதை பெற்ற முதல் மலேசிய சாதனையாளர் தினகரன் கோவிந்தசாமி!

கோலாலம்பூர் ஜூலை 23-
மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த கௌரவ விருது குறித்து தமது மனமார்ந்த நன்றியை தினகரன் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 22 ஆண்டு காலமாக, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, மலேசிய திருநாட்டில் கல்வி,மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக பணி பசுமை, அரசியல், ஆன்மீக வளர்ச்சி ஆகிய துறைகளில் தொடர்ந்து பணியாற்றியதற்காக இந்த விருதை வழங்க இருப்பதாக தமிழ்நாடு “
மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை இந்த மாபெரும்
புரட்சி வீரன் என்ற விருதை வழங்கி உள்ளது.

1984-ஆம் ஆண்டு கோவிந்தசாமி சுந்தரி தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையாக தெலுக் இந்தானில் பிறந்து 1991 ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில், சோகமான தோட்ட தமிழ் பள்ளியில் ஆறாண்டு தமிழ் கல்வி கற்று, அம்புரோஸ் இடைநிலைப் பள்ளியில், ஐந்தாண்டு இலக்கிய தமிழ் கற்ற தினகரன், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் பொதுத் தேர்தலில், பெருவாஸ் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட மாண்புமிகு டத்தோ ஙேகூஹாம் வெற்றிக்காக அரசியல் பிரச்சாரங்களில் களம் இறங்கி, வரலாற்றில் முதல் முறையாக 5 மாநிலங்களை அப்போதைய பக்காத்தான் ராக்கியாட்
கைப்பற்றி மாநில அரசாங்கத்தில் இடம்பெற்று ஆட்சிக்குழு உறுப்பினராக இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 மாத ஆட்சி மாற்றத்துக்கு பிறகு எதிர்க்கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஆகவும், மாவட்டத்திலுள்ள பல அரசு சார இயக்கங்கள் ஆலயங்கள் தமிழ் பள்ளி வளர்ச்சி சமுதாய பிரச்சனை குறித்து, தமது சேவையை நிலைநாட்டிய தினகரன்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தலைமைத்துவத்தின் கீழ் தமது மக்கள் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles