கமலா ஹாரிஸுக்கு கட்சிக்குள் போதுமான ஆதரவு – அதிபர் வேட்பாளர் ஆவது உறுதி!!!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,976 பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சித் தலைவர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக, அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் கட்சி வட்டாரங்கள், உள்கட்சியில் எழுந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகரித்தது.

அதிபர் ஜோ பைடன் தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு தெரிவித்த 36 மணி நேரத்துக்குள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு கூடியது.
இது குறித்து கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றிரவு, எங்கள் கட்சியின் வேட்பாளராக ஆவதற்கு தேவையான ஆதரவை பெற்றது குறித்து பெருமை அடைகிறேன்.

அடுத்த சில மாதங்கள் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, அமெரிக்கர்களின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசுவேன்.
கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை தோற்கடிக்க நான் தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles