

செ.வே.முத்தமிழ் மன்னன்
ஷா ஆலம், ஜூலை 25-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 92 இந்து ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று 8 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி மானியத்தை வழங்கி சாதனை படைத்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியத்தை நேரடியாக வழங்கி வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டும் சிலாங்கூர் மாநில அரசு இந்து ஆலயங்களுக்கு 17 லட்சத்து 25,000 வெள்ளி மானியத்தை ஓதுக்கி உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் பத்துமலை தைப்பூசத் தில் 46 இந்து ஆலயங்களுக்கு முதல் கட்ட மானியமாக 5 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இன்று இரண்டாம் கட்டமாக 92 ஆலயங்களுக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி மானியத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு எடுத்து வழங்கினார்.
இன்று ஷா ஆலம் டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 92 இந்து ஆலய பொறுப்பாளர்கள் நேரடியாக இந்த நிதியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கட்டங்களாக இந்து ஆலயங்களுக்கு 13 லட்சத்து 95,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் மூன்றாம் கட்டமாக 3 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வழங்கப்படவுள்ளது என்று பாப்பா ராயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.

