2 கோடியே 42 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பாக இரண்டு வங்கி நிர்வாகிகள் உட்பட 10 பேர் குற்றச்சாட்டு!

கோத்தா கினாபாலு: ஜுலை 25-
2 கோடியே 42 லட்சம் வெள்ளி தொடர்பாக மோசடியில் கூட்டாக இணைந்து குற்றம் புரிந்தது தொடர்பில் 10 பேருக்கு எதிராக கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது

குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் இருவர் வங்கியின் நிர்வாகிகளாவர். இந்த விவகாரத்தில் ஆசிரியர், குத்தகையாளர், சுய தொழில் செய்யும் வியாபாரி ஆகியோருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டது

நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் முன்னிலையில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படும்.

கூட்டாக இணைந்து வங்கி மோசடியில் ஈடுபட்டனர். கோத்தா கினாபாலுவில் உள்ள கிளை வங்கி ஒன்றில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அதோடு யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் செவிமெடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles