
புத்ராஜெயா: ஜுலை 25-
நாட்டில் மொத்தம் 142,510 பேர் கறுப்பு பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை இதற்கு முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டியுள்ளது.
கறுப்பு பட்டியலில் இருந்தவர்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழவும் வணிகத்தை மீட்டெடுக்கவும் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
142,500 க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் பொருளாதாரத்தை இயக்க உதவுவதற்கு அவர்கள் திரும்ப முடியும்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை வரலாற்றில், இவ்வளவு பேர் கறுப்பு பட்டியலிலிருந்து எந்த அரசும் விடுவிக்கவில்லை என்று மலேசியக் கறுப்பு பட்டியல் துறையின் 100 ஆண்டு விழாவில் உரையாற்றியபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.
பெர்னாமா

