ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் டட்யானா சாலை விபத்தில் உயிரிழப்பு

ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓசோலினா(38) துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டாட்டியானா ஓசோலினா இன்ஸ்டாகிராமில் 10 லட்சமும், யூடியூப்பில் 20 லட்சம் பின்தொடர்பவர்களும் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் சாகச பைக் ரைடிங் செய்து, அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரது அழகு காரணமாக அவரது ரசிகர்கள் ரஷ்யாவின் மிக அழகான பைக்கர் என்று அழைக்கிறார்கள். இவருக்கு 13 வயதில் மகன் உள்ளார்.
38 வயதான டாட்டியானா துருக்கியின் மிலாஸ் பகுதியில் தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டிச்சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டாட்டியானா எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles