
சென்னை: அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஆனதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது என திராவிட கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டு அரசின் வரவு – செலவுத் திட்டமான ‘பட்ஜெட்‘ என்பது, வெறும் வரவு – செலவுத் திட்டம் என்பதைத் தாண்டி, அரசின் மூலாதாரத் திட்டம் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது!
தனது நாற்காலியை ஆடாது நிலைக்க வைக்கும் நோக்கத்தில் கணிசமான நிதியை இரண்டு மாநிலங்களுக்கே (ஆந்திரா, பீகாருக்கு) மட்டும் ஒதுக்கி, ஏற்கெனவே வாக்களித்த மற்ற மாநிலங்களுக்கோ பட்டை நாமம் போட்டுவிட்டார்!
இப்படியே நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்தால், அதன் ஆட்சி தொடர்வது நீடிக்குமா? நிலைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

