மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சில பாதைகள் மூடப்படும்

கோத்தா கினபாலு செப் 12- செப்டம்பர் 16 அன்று மெர்டேக்கா திடலில் இரவு 7 மணிக்குத் தொடங்கும் மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சில பாதைகள் நிரந்தரமாகவும் அல்லது அவ்வப்போது மூடப்படும்.

மெர்டேகா360 என்ற அதிகாரப்பூர்வ முகநூல் சமூகப் பக்கத்தின் மூலம், சிம்பாங் தீகா புக்கிட் பெண்டேரா பாதை, கோத்தா கினாபாலு சமூக மண்டபத்திற்கு நுழையும் பாதை மற்றும் சிம்பாங் பிந்து கெர்பாங் இஸ்தானாவிலிருந்து மெர்டேகா திடலை நோக்கி செல்லும் பாதை ஆகியவை நிரந்தரமாக மூடப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டாரன் பகுதியில் உள்ள கேஎஃப்சிக்கு அருகிலுள்ள ஜாலான் பாடாங்கின் நுழைவாயில் அவ்வப்போது மூடப்படும்.

அப்பகுதி வழியாக செல்லும் சாலைப் பயனாளிகள் சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்குக் கவனமாகவும், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு, http://www.merdeka360.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles