கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தேறியது!

கோல் சிலாங்கூர், செப் 15-
நாட்டில் மிகப்பெரிய ஆலயமாக விளங்கி வரும்
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் மலேசிய ரீதியில் புகழ் பெற்ற ஆலயமாகும்.

சிலாங்கூர் மாநிலத்தில் பத்துமலைக்கு அடுத்து இங்கு தான் தைப்பூசம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் ஆலயத்தின் 7ஆவது மகா கும்பாபிஷேக விழா ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரமசிவம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் நாராயணசாமியும் இதில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர். சரியாக காலை 9.30 மணிக்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்று ஆலயத்தின் துணைச் செயலாளர் தெரிவித்தார்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆலயத்தில் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles