ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கியது ம இகா தேசியப் பேராளர் மாநாடு!

மா. பவளச்செல்வன்

ஷா ஆலம், செப் 15-
மலேசிய இந்தியர்களின் நாடித்துடிப்பாக விளங்கும் ம இகா கட்சியின் 78ஆவது தேசியப் பேராளர் மாநாடு இன்று ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கியது.

இந்த மாநாட்டில்
நாடுதளுவிய அளவிலிருந்து ம.இ.கா பேராளர்கள் பெரும் அளவில் கலந்துக் கொண்டுள்ளனர்.

காலையில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் , துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் பேரவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இருவருக்கும் கட்சி உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில் ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேராளர்களிடம் உரையாற்றினார்.

மாலை 2.00 மணிக்கு மேல் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்து மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles