Liga Putri கால்பந்து போட்டியில் பினாங்கு இந்தியன் எஃப். சி. அதிரடி வெற்றி!

ஷா ஆலம் ஏப் 28-
பெண்கள் மட்டுமே பங்கேற்கும் லீகா புத்ரி கால்பந்து போட்டி தொடரில் புத்ராஜயா டைக்ரஸ் அணிக்கு எதிராக பினாங்கு இந்தியன் எஃப்சி 6️⃣ – 0️⃣ என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மேல் கிளானா ஜெயாவில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை பினாங்கு இந்தியன் எஃப்சி முழு ஆதிக்கம் செலுத்தியது.

களத்தில் இருந்த ஒவ்வொரு வீராங்கனையின் சிறப்பான கூட்டு முயற்சி. கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் போராடும் குணம் ஆகியவை இந்த அபார வெற்றிக்கு காரணம் என்று பினாங்கு இந்தியன் எஃப்சி கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் இளம் வீராங்கனை தனுஸ்ரீ 19,34,39 ஆவது நிமிடங்களில் மூன்று ஹெட்ரிக் கோள்களை அடித்து சாதனை படைத்தார்.

இதர கோல்களை
NUR QYISSYA AMANI BINTI MOHD NOR AZAMUDDIN (3 ஆவது நிமிடம்),
AINUR SAFIYYA BINTI MOHD NOR AZAM (18 ஆவது நிமிடம்) மற்றும் KESHAYINI A/P SIVAKUMAR ( 43 ஆவது நிமிடம்) ஆகியோர் அடித்தனர்..

பினாங்கு இந்தியன் எஃப்சி கிளப்புக்கு தொடர்ந்து ஆதரவளித்து, வழிகாட்டி, அணி மீது நம்பிக்கை வைத்த எங்கள் அனைத்து புரவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நீங்கள் இல்லாமல், இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

இந்த வெற்றி, அணியின் சின்னத்திற்குப் பின்னால் உள்ள அனைவருக்கும் சொந்தமானது! இந்த உத்வேகத்தைத் தொடர்வோம் என்று ஸ்ரீ சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles