உலகக் கிண்ண கால்பந்து போட்டி!. தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி

மெக்சிகோ சிட்டி: 2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோவில் கோலாகலமாகத் தொடங்கியது.

இத்தொடரின் தொடக்க விழா உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் ஷகீரா மற்றும் நைஜீரியாவின் பர்னா பாய் ஆகியோரின் அதிரடி இசையுடன் தொடங்கியது.

அவர்கள் இத்தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான ‘டாய் டாய்’ பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மெக்சிகோ – தென் ஆப்ரிக்கா தொடக்க ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles