மே 1 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை!

கோலாலம்பூர், ஏப் 28-
தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரிக்பீல்ட்ஸ் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் வரும் மே 1 ஆம் தேதி அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

சித்ரா பௌர்ணமி மை முன்னிட்டு அகத்தியர் பெருமானுக்கு இந்த சிறப்பு பிரார்த்தனையும் பூசையும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அகத்தியர் அருள் ஞான சபை தலைவரும் அகத்தியர் பெருமானின் தொண்டருமான எஸ். பக்தவச்சலம் தெரிவித்தார்.

காலை7.00 மணிக்கு மேல் 108 சங்காபிஷேகத்துடன் ஹோம பிரார்த்தனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துவார்கள்.

அகத்தியர் பெருமானின் தொண்டர் எஸ். பக்தவச்சலம் தலைமையில் அகத்தியரை வழிபடும் தொண்டர்கள் இதில் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள்.

மதியம் 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா மற்றும் அகத்தியர் சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles