5வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்தியது இந்தியா!

பெய்ஜிங்: செப் 18-
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சீனாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி.

நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி 5ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்தியா சார்பில் யுகராஜ் சிங் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இந்தியா 2011, 2016, 2018, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

2012ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2013-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை. 2012 மற்றும் 2013 ஆண்டுகளை தவிர, அனைத்து போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles