


செராஸ், செப் 18-
2024 மலேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் Aeon Mall செராஸ் செலாத்தான் பெரங்காடியில்
மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா (ஸ்குவாத்ஸ்) மற்றும் தேசிய பல்கலைக்கழகம் (யுகேஎம்) MBA மாணவர்களுடன் இனைந்து
82ஆவது Jom Sihat மருத்துவ முகாம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தேசிய இரத்த மையம், இயோன் மால் செராஸ் செலத்தான், தேசிய புற்றுநோய் மன்றம் (MAKNA), மெடிஹப் கிளினிக், மற்றும் தேசிய உடல் உறுப்பு தான மையம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் எங்களுடன் கைகோர்த்து சிறப்பாக நடைபெற ஆதரவளித்தனர்.
உயிரைக்காக்கும் தானமே இரத்த தானம்.இனம், மொழீ, மதம் பாராமல் ஒருவர் கொடுக்கும் இரத்தம் முன்று உயிர்களை காப்பாற்றும்.
இத்தகைய இரத்த தான முகாம், மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கவும், நாட்டில் உள்ள பிற சமுதாயங்களோடு ஒன்றினங்கவும் உதவும்,ஏன்றார் மலேசியா ஹீகுழந்தை வடிவேலன் திருப்பனி சபாவின் தேசியத் தலைவர் கலைமாமனி Dr. இர.பிரேமகன்னன்.
சிறப்பு விருந்தினர்ராக திரு. பாலமுரளி கோவிந்தராஜு (கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி மற்றும் எம்பிகேஜே உறுப்பினர்),
டாக்டர் மாறா ரிடுவான் (டெபுட்டி டீன் Ukm ), டாக்டர் ஐனுல் ஹுடா (யுகேஎம் MBA திட்ட ஆலோசகர்), திரு. கைருல் கமாரூடீன் (Perfect tourism Institute Malaysia இயக்குநர்), திருமதி தேன்மலர் (இந்திய சமுதாயத் தலைவர் காஜாங் தொகுதி ) மற்றும் பல நல்லுள்ளங்கள் வந்து கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், 7 லிருந்து 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் வர்ணம் தீட்டும் போட்டியும் நடந்தேறியது.
அதோடு மட்டும் அல்லாது 800 க்கும் மேற்பட்டோர் பல்வேறு சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு நன்மைகளையும் பெற்றுள்ளனர்
,400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கி பல உயிர்களை காக்க முன்வந்து எங்கள் சேவையை வெற்றி பெறச்செய்தனர்.
கலைமாமணி Dr. இர பிரேமகன்னன் மலேசியா வாழ் மக்களுக்கு மலேசியா தின வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இரத்த தானம் செய்தவர்களுக்கும், Ukm MBA மாணவர்களுக்கும் , ஸ்குவாத்ஸ் உறுப்பினர்களுக்கும் மற்றும் இந்த சுகாதார விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிருவனங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

