
அலோர் ஸ்டார், நவ 10-
கடந்த 1994ஆம் ஆண்டில் பயின்ற பாரதி தமிழ்ப்பள்ளி அலோர் ஸ்டார், கெடா முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா கடந்த 1.11.2024 நாள் வெள்ளிக் கிழமையன்று, KFC Jalan Stadium-இல் நடைபெற்றது.
இந்த ஒன்று கூடல் விழாவானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை நடைபெற்றது.
முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்துப் பழைய இனிய நினைவுகளை மீட்டெடுப்பது புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஒன்று கூடும் விழா நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், இந்த விழாவின் மூலம் விட்டுப்போன நண்பர்களின் தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

