பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

ஈப்போ, நவ.10: இம்மாதம் 18 ல், பேராசிரியர் மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இவ்விழா மாலை மணி 4.00 க்கு, ஜாலான் சிலிபின், கே.ஜே.பி. மஹால் ஈப்போவில் நடைபெறும் என்று நூலாசிரியர் மருத்துவர் வ.ஜெயபாலன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் முக்கிய பிரமுகர்களாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் டத்தோ ப.சகாதேவன், பேராசிரியர் சொ.சொ. மீ.சுந்தரம், டாக்டர் வி ஜி சந்தோசம் தலைவர் விஜிபி குழுமம், மல்லை சி இ சத்யா தலைவர் மல்லை தமிழ்ச் சங்கம் ஆகியோர் கலந்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக மூன்று நூல்கள் வெளியீடு செய்யப்படும்.

முதலாவதாக கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களிலுள்ள இலக்கிய நயத்தையும் பாடல்கள் பிறக்க காரணமாயிருந்த சூழலையும் சுவைபட விளக்கும் நூல் ஆகும். இரண்டாவதாக, அமுதே தமிழே என்ற தமிழ் இலக்கியம், இலக்கியவாதிகளைப் பற்றிப்பேசும் கட்டுரை தொகுப்பாகும்.

மூன்றாவதாக, உணர்வு நயமும், ஓசை நயமும், கருத்து நயமும் நிறைந்த கவிதை தொகுப்பாகும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வு கலையும் இலக்கியமும் சங்கமம் செய்யும் நிகழ்வாகும்.

அதோடு, இலக்கிய சொற்பொழிவும், பேராக் மாநிலத்தின் மூத்த எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்ஞப்படும். ஈப்போ வட்டார சமூக நல மற்றும் இலக்கிய இயக்கங்களின் ஆதரவில் நடைபெறுகிறது.

அத்துடன், கலை நிகழ்ச்சி, தேநீர் விருந்து மற்றும் இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள பொதுமக்கள் அன்போடு அழைக்கப்படுவதாக ஏற்பாட்டுக்குழு சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles