
கோலாலம்பூர், ஜூலை 6-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜொகூர் வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர் இரமணன் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை பக்கத்தான் ஹராப்பானுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நானும் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இது வெற்றியை தரும் வகையில் உள்ளது என்று மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.
வரும் ஜூலை 11 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும். ஜொகூர் மாநில மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் மாநில மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை மிகவும் சிறப்பானது என்று அவர் சொன்னார்.

