இலங்கையின் புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் பதவியேற்பு

இலங்கை: நவ 19-
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய (54) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிபர் திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை அதிபர் திசாநாயக்க நேற்று அறிவித்தார்.

அதன்படி, பிரதமராக ஹரிணி அமரசூர்ய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.இலங்கை புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் நலத் துறை அமைச்சராக மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல கடல் வளத் துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles