
கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

