
சென்னை நவ 29-
கடந்த 2021ஆம் ஆண்டில் மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் – அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள்.
அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சித்தார்த்தும், அதிதி ராவ்வும் சேர்ந்து ராஜஸ்தானில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
அந்த புகைப்படங்களை தங்கள் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இருவரும், ‘வாழ்க்கையில் மிக முக்கியமானது ஒருவரை ஒருவர் தாங்கி பிடிப்பதே’ எனப் பதிவிட்டுள்ளனர்.
புதுமண தம்பதியருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

