சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி

சிங்கப்பூரில் ஆக நீளமான ‘Dresden Stollen’ வகை கிறிஸ்துமஸ் ரொட்டியைத் தயாரித்த Resorts World செந்தோசா, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ரொட்டியின் நீளம் 93.1 மீட்டர் ஆகும்.

எடை 500 கிலோகிராம்.

கடந்த 3 மாதங்களாகச் சமையல் நிபுணர் ஜூடும் (Jude) அவரது குழுவும் பல மணி நேரம் செலவழித்து அந்த ரொட்டியைத் தயாரித்துள்ளனர்.

சைனாடவுனின் துடிப்பாக முதுமையடையும் நிலையத்தில் உள்ள முதியவர்களுடனும் Food from the Heart அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் ரொட்டி
பகிர்ந்து கொள்ளப்பட்டது.

“Resorts World செந்தோசா விழாக்கால உணர்வைப் பிறருக்குக் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது,” என்றார் அதன் தலைவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles