சீபில்டு தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்!

ஷா ஆலம், டிச. 21- சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 46 -ஆவது விளையாட்டுப் போட்டி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளித்திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியை கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், கவுன்சிலர் தர்மிஸி, கோத்தா கெமுனிங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் கோபி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles