
கோலாலம்பூர் ஜூன் 23-
லீகா புத்ரி கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் வரும் ஜூன் 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கிளானா ஜெயாவில் உள்ள பிகேஎன்எஸ் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இம்முறை இறுதி ஆட்டத்தில் பினாங்கு இந்தியன் எஃப்சி குழுவுடன் பெர்லீமா யுனைடெட் எப்சி மோதுகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது ஒரு கனவாக மட்டுமே இருந்தது.
தியாகம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையால் உருவான அந்தக் கனவு, இன்று மலேசிய மகளிர் கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் பினாங்கு இந்தியன் எஃப்சி குழு நனவாகியுள்ளது.
வரும் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8:30 மணிக்கு ஸ்டேடியம் PKNS, கிளானா ஜெயாவில் நடக்கும் இவ்விரு குழுக்கள் இடையிலான ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 ஆண்டுகளின் கடின உழைப்பு.
எண்ணற்ற தியாகங்கள்.
வரலாறு படைக்க ஒரே ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது என்று பினாங்கு இந்தியன் எஃப்சி கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பல போராட்டங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த இந்த தருணத்தில் பினாங்கு இந்தியன் எஃப்சி இறுதி ஆட்டத்தில் அதிரடி படைக்க காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
எங்கள் வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருக்க அனைத்து ஆதரவாளர்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும், கால்பந்து ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
வாருங்கள், லீகா புதேரி 2026 சாம்பியன் பட்டத்திற்கான இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணைந்து வரலாற்றை உருவாக்குவோம்!
ஒரே ஒரு இறுதிப்போட்டி, ஒரே ஒரு கனவு. வரலாறு படைக்க ஒரே ஒரு வாய்ப்பு.
ஜூன் 28 ஆம் தேதி உங்களை காண ஆவலுடன் கிளானா ஜெயா பிகேஎன்எஸ் அரங்கில் பினாங்கு இந்தியன் எஃப்சி கிளப் வீராங்கனைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

