
கிள்ளான் உத்தாமா, ஆகஸ்ட் 8 –
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரார்த்தனையில் டத்தோ சிவகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பிரார்த்தனைக்கு பிறகு ஆலயம் அதிகாரப்பூர்வமாக MAHIMA-வில் உறுப்பினராக இணைந்ததற்கு ஆலயத் தலைவரிடம் டத்தோ சிவக்குமார் MAHIMA உறுப்பினர் சான்றிதழை வழங்கினார்.

மலேசியா முழுவதும் உள்ள இந்து ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
மேலும், ஆலயத்தின் சமயப் பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஆலய நிர்வாகக் குழுவினருக்கு டத்தோ சிவகுமார் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

