கோத்தா அங்ஃகிரிக் தொகுதி மாணவர்களுக்கு 8 மடிக்கணினிகள் வழங்கி MBI அறக்கட்டளை உதவி

ஷா ஆலாம், செப் 24 – சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை (Yayasan MBI) , கல்வித் தேவைக்காக மாணவர்களுக்கு 8 மடிக்கணினிகளை வழங்கி உதவியது.

கோத்தா அங்கிரிக் சட்டமன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்த மடிக்கணினிகளைப் பெற்றுக் கொண்டதாக, மாநில இளைஞர் ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

” மாணவர்களின் கற்றலுக்கு மடிக்கணினி அத்தியாவசியமாகிறது. எனினும் அதனை அனைத்து குடும்பங்களும் வாங்கித் தரும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை.

எனவே அக்குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக தங்களின் உதவி அமையும் என நம்புகிறேன்” என நஜ்வான் தமது ஃபேஸ்புக் அகப்பக்கம் வாயிலாக தெரிவித்தார்.

தமது அலுவலகத்தில், கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles