தாய்மைப் பொறுப்பு பிரசாரப் பணிக்கு தடையில்லை – ஃபர்ஸானா

மலாக்கா, நவ 8-

மலாக்கா மாநிலத்  தேர்தலில்   போட்டியிடும்  ஃபர்ஸானா, ஒரு தாயாக தனது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் தேர்தல் பிரசாரப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 தாய்மைப் பொறுப்பு தனது அரசியல் பயணத்திற்குத் தடையாக இல்லை என்பதை அவர் நிரூபித்து வருகிறார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் கிளேபாங் (Klebang) சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் (PH) சார்பில் போட்டியிடும் 26 வயதான ஃபர்ஸானா ஹயானி முகமது நாசிர், பெண்களின் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக நேரத்தை ஒதுக்குவதுடன், குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தி வருகிறார். குடும்பத்தினரின் ஆதரவுடன் தனது பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தி பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

மேலும், இல்லத்தரசிகள், இளம் பெண்கள், மீனவர்கள் மற்றும் நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles