அந்தோணி லோக்கின் பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் வலியுறுத்து

ஹங்சோ, செப்.23: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் விவகாரத்தில் வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைத் தொடர்ந்து, அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்குப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சுயநல அரசியல் குழுக்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை DAP எடுக்கக்கூடாது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கட்சியின் பொதுச் செயலாளரான லோக் பதவி விலகினால், ஒட்டுமொத்த DAP கட்சியும் நிர்வாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்தும் அன்வார் கேள்வி எழுப்பினார்.

“சிலர், ‘ஏன் அந்தோனி லோக் மட்டும்? DAP முழுவதுமாக வெளியேறக்கூடாதா?’ என்று கேட்கிறார்கள். அது யாருடைய யோசனை? அவர் ஏன் வெளியேற வேண்டும்? அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் மன்னிப்பு முடிவை முன்மொழியவில்லை; உண்மையில், அதை எதிர்க்கவே அவர் தன்னால் முடிந்தவரை முயன்றார்.

“எனவே, அரசாங்கம் சீர்குலைவதைக் காண விரும்பும் சுயநலவாதிகளின் அழுத்தத்திற்கு DAP பணியக்கூடாது. இத்தகைய மோசமான உத்திகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்த அவர்கள் வழிகளைத் தேடுகிறார்கள்,” என்று ஷாங்காயிலிருந்து ஹங்சோவிற்கு அதிவேக ரயிலில் பயணித்தபோது ஊடகங்களிடம் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles