
கோலாலம்பூர், ஆக 8-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் பெர்சாமா கட்சி அதன் வேட்பாளர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி கூறினார்.
மலாக்கா மாநில தேர்தலில் பெர்சாமா கட்சியின் தயார் நிலை என்பது இறுதிகட்டத்தில் உள்ளதாக முன்னாள் அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் 2027 பிப்ரவரி மாதம் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் பெர்சாமா கட்சி முன்கூட்டியே அதன் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.
இருப்பினும், மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் கூறுகையில் மலாக்கா மாநில தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.

