
சுங்கை சிப்புட், ஜூன் 23-
சுங்கை சிப்புட் எல்பில் தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருவிழாவிற்கு மதிப்புமிகு தான்ஶ்ரீ எம்.இராமசாமி அவர்கள் சிறப்பு வருகையளித்ததுடன், பக்த மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு ஆலயத்திற்கு நன்கொடையாக ரி.ம. 5,000 வழங்குவதாக உறுதியளித்தார்.
தான்ஶ்ரீ அவர்களின் வருகை திருவிழா கொண்டாட்டத்திற்கு மென்மேலும் சிறப்பைச் சேர்த்ததுடன், உள்ளூர் மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தியது.

