
லண்டன் டிச 27-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வூல்ஸ் கிளப் நடத்திய அதிரடி தாக்குதலில் பலம் வாய்ந்த மென்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
இதுவரை 18 ஆட்டங்களை முடித்துள்ள மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு இது 8 ஆவது தோல்வியாகும்.
22 புள்ளிகளுடன் 14 ஆவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட் இம்முறை முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வாய்ப்பை இழந்து வருகிறது.

