
லண்டன் டிச 27-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் கிளப்பின் வெற்றி தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் லைசெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
இதுவரை 17 ஆட்டங்கள் வழி லிவர்பூல் 42 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
18 ஆட்டங்கள் முடிவில் செல்சி மற்றும் நோட்டிங்காம் போரோஸ்ட் தலா 35,34 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

