பேறு குறைந்த பிள்ளையுடன் காலை இழந்து வாடும் ஆடவருக்கு 1,200 வெள்ளி மதிப்புள்ள பொருள் உதவி புரிந்தார் கவுன்சிலர் எலிஸ்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், ஜன 18-
சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில்
செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் Alice Choo மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் YB Chua Wei Kiat ஆகியோர் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில்
சக்கர நாற்காலி உதவியோடு அமர்ந்திருந்த இருவரை சந்தித்து உதவிகளை வழங்க அவர்கள் அந்த வீட்டிற்கு விஜயம் புரிந்தனர்.

Tee Kock Heng என்பவர் கோவிட் -19 தாக்கத்தின் போது தனது காலை இழந்ததால் அவரது குடும்பம் பெரும் நெருக்கடியை எதிர் நோக்கியது.

அவரின் மனைவியின் பகுதி நேர வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவரின் மகள் பேறு குறைந்தவர் ஆவார்.
இவர்களின் நிலைமை அறிந்து கவுன்சிலர் Alice Choo சீனப் புத்தாண்டை முன்னிட்டு RM1, 200 மதிப்புள்ள வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார்.

ரவாங் சட்டமன்ற உறுப்பினர்
YB Chua தனது மக்கள் தனது சேவை மையத்தில் பேறு குறைந்த பிள்ளைக்கு சிறிய பணிகளை மேற்கொள்ள வேலையும் வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles