


கோலாலம்பூர் ஜன 19-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு இன்று புக்கிட் கியாராவில் தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் டாக்டர் வேல் குமார் ஆசியோடு இன்று தமிழர் பாரம்பரியம் படி பொங்கல் வைக்கப்பட்டது.
காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.
2001 இல் தொடங்கப்பட்ட காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் முதல் பொங்கல் விழா இதுவாகும் என்று
செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.
கிளப்பின் பொருளாளர் ராணி, கிளப்பை தோற்று வகித்தவர்
சக்கரவர்த்தி கோபால்,
மகளிர் அணி தலைவி விவியன் மற்றும்
இளைஞர் அணி தலைவர் ஓகே.ஆத்மாந்தன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

