தீபாவளி பெருநாளை முன்னிட்டு சுங்கைபட்டாணி சிறைச்சாலையில் கொண்டாட்டம்.

சுங்கைபட்டாணி ஜன 19-

ஒவ்வொரு வருடமும் தீபத் திருநாளை முன்னிட்டு சுங்கைபட்டாணி சிறைசாலை தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை நிகழ்த்தி வருவதுண்டு.

கடந்த வாரம் சனிக்கிழமை தீபத் திருநாள் விழாவினை தனது சிறைச்சாலையில் நிகழ்த்திய சுங்கைபட்டாணி சிறைச்சாலை தங்களோடு ஒத்தழைப்பு நல்கி வரும் சில இந்திய அமைப்புகளையும் அழைத்து ‘ஜாலியான் காசே’ எனும் இத்தீப திருநாளை சிறப்பாக கொண்டாடியது.

சுங்கைபட்டாணி சிறைசாலையில் 21வயதிற்குட்பட்ட கைதிகள் மட்டுமே தடுத்து வைக்கப்படுவர்.அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் நன்னெரி வகுப்புகள் மற்றும் கலாச்சார வகுப்புக்ளையும் மாதம் மாதம் சிறைசாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளுக்கு நிகழ்த்தி வருவது குறிப்பிடத் தக்கது.

அந்த வகையில் கைதிகளின் குடும்பத்தாரையும் இங்குள்ள இந்திய அமைப்புகளையும் இந்த நிகழ்விற்கு அழைத்து தீபாவாளி நிகழ்வினை கொண்டாடியது.அதே வேளையில் நேற்று முன் தினம் ‘பார்க் எவன்யூ’பிரபல தங்கும் விடுதியில் “ஜாசா டி கெனாங்”எனும் நிகழ்வையும் சிறைசாலை இலாக ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பதவி உயர்வு அடையும் அதிகாரிகள் மற்றும் இடமாற்றம் செல்லும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.அதில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் அவர்களுக்கு இந்த நிகழ்வில் சிறப்புகளும் செய்யப்பட்டன.


இச்சிறைச்சாலையின் அதிகாரியாக பணியாற்றிவரும் கதிரேசன் வந்திருந்த விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரனை செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles