



செர்டாங், மே 3-
வர்த்தக தொழில் மையங்களுக்கு பெயர் போன செர்டாங் ஸ்ரீ கெம்பாங்கான் தாமான் இக்குனியில் இன்று Nyra Cafe & Dazzling Event Hall” மண்டபத்தை டத்தோ டி மோகன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து ஆதரவு வழங்கினார்.
இன்று பிற்பகலில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு தலைமை ஏற்ற டத்தோ டி. மோகன் இந்த மண்டபத்தை திறந்து வைத்ததோடு இந்தியர்கள் தங்களது தேவைகளுக்கு இந்த மண்டபத்தை பயன் படுத்தி ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் முனியாண்டி மற்றும் எம்.ஜி. விஜேய் கூட்டு முயற்சியில் இந்த மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது.

பிறந்த நாள் விழா, குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா, விருந்து நிகழ்ச்சி போன்ற விழாக்கள் இந்த மண்டபத்தில் ஏற்று நடத்தும் வகையில் அமைந்துள்ளது.
சுமார் 200 பேர் அமரும் வகையில் மேஜை நாற்காலிகள், விஜபி நாற்காலிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்த மேடையும் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று டத்தோ டி மோகன் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் இந்தியர்கள் இது போன்ற மண்டபங்களை அமைத்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.
பிறந்த நாள் விழா நடத்துவதற்கு கூட நாம் மற்ற இனத்தவர்களின் மண்டபத்தை வாடகைக்கு எடுக்கிறோம்.
இதுபோன்ற மண்டபங்கள் இருந்தால் இங்குள்ள மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
அந்த வகையில் டாக்டர் சுரேந்திரன் மற்றும் எம்.ஜி. விஜேய் இணைந்து இந்த மண்டபத்தை நிர்வாகிப்பதை பெரிதும் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
முன்னதாக இந்த விழாவில் கலந்து கொண்ட டத்தோ மோகன் மற்றும் டத்தின் லோகேஸ்வரி தம்பதியருக்கு எம்.ஜி. விஜேய் தம்பதியர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், டத்தோ ஜோ கணேசன், தொழில் அதிபர் செளந்திர பாண்டியன், டத்தோ கானா, போர்ட் டிக்சன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எம்.ரவி, மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், டத்தோஸ்ரீ ஆர்.கே.ராதா – டத்தின்ஸ்ரீ லதா தம்பதியர், கலைஞர் இராமச்சந்திரன், கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். விஜய சேகர், பென்ஜி, ம இகா இளைஞர் அணி துணை தலைவர் கேசவன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
மிக விரைவில் காஜாங் நகரில் இதுபோன்ற ஒரு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று டாக்டர் சுரேந்திரன் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

