பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

கோலாலம்பூர் ஜன 18-
இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தளமாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று கே.வி.டி. கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையின் உரிமையாளர் தங்கதுரையின் இது மூன்றாவது நகைக்கடையாகும்.

மஸ்ஸிட் இந்தியாவில் இரு தங்க கடைகள் வெற்றிகரமாக இயங்கி வரும் வேளையில் இது மூன்றாவது தங்க மாளிகையாகும்.

ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா ஆகியோர் கூட்டாக கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் காரா சாரம் உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீதரன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை ஸ்ரீ முருகன் பரிபாலன சபை கோவில் தலைவர் டத்தோ சுரேஸ், டான்ஸ்ரீ பூவன், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில ம இகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர், பேராக் மாநில இந்திய நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ராசூல் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிவி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையில் அனைத்து டிசைன்களில் விதவிதமான தங்க நகைகளும் வைர நகைகளும் விற்கப்படுவதாக அதன் உரிமையாளர் தங்கதுரை தெரிவித்தார்.

இன்று கேடிவி கோல்ட் கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையை திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற கவிமாறன் திறம்பட அறிவிப்பு செய்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles