பொதுக்கூட்டம் மூலம் சுங்கை தோபாவாங் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் – வட்டார மக்கள், போபி சேகர் அணியினர் வலியுறுத்தல்

பீடோங், ஜூன் 18 – சுங்கை தோபாவாங் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகம் பொதுக்கூட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வட்டார பொதுமக்களும், ஆர். போபி சேகர் அணியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று ஆலய வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த தேவஸ்தானத்துடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் வட்டார மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆலயத்தின் திருப்பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு வரை கெடா மாநில பதிவு இலாகாவிற்கு கணக்கு அறிக்கைகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் 2017ஆம் ஆண்டு கணக்கு அறிக்கை தாக்கல் செய்யத் தவறியதால் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் போபி சேகர் அணியைச் சேர்ந்த கார்த்திக் தெரிவித்தார்.

மேலும், திவால் துறையிலிருந்து (Insolvency Department) ஆலய சொத்துகள் குறித்து விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பதிவு இலாகாவின் அனுமதி இன்றி இருந்த காலகட்டத்தில் ஜெயக்குமார் சுப்பிரமணியம் மற்றும் அவரது நண்பர்கள் ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயக்குமார் தலைமையில் தேவஸ்தானம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆலய நிலம் தொடர்பான பதிவு நடவடிக்கைகள் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கார்த்திக் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே, 2023ஆம் ஆண்டிலேயே ஆலய நிலத்தின் பெயரில் வேறு ஒ�

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles